எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் சகோதரி குடும்பத்துடன் நாட்டில் இருந்து வெளியேற்றம் - பின்னணி என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்து அழித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தின் போது அவர் அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை