மனைவி வேறொருவருடன் சென்றதால் குழந்தையை தோளில் சுமந்தவாறு ரிக்ஸா ஓட்டும் தந்தை!
காதலித்த மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால் தனது கைக்குழந்தையுடன் தந்தை ஒருவர் ரிக்ஸா ஓட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் ரிக்ஷா ஓட்டும் ராஜேஷ் என்ற இளைஞருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் கவனிக்க யாரும் இல்லாததால் தனது மூத்த குழந்தையை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, இளைய குழந்தையை அவர் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.
ஒரு பக்க தோளில் வறுமையையும் மறு பக்க தோளில் குழந்தையையும் சுமந்து கொண்டு ஒரு கையால் ராஜேஷ் ரிக்ஷா ஓட்டுவதைப் பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால், தாய் ஸ்தானத்தில் இருந்து கவனித்து வருகின்றார். ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறு கையால் ரிக்ஷா ஓட்டிச் செல்லும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை