• Breaking News

    ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!


     உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாசிம் மனைவிக்கு எதிரான வழக்கு

    நேற்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


    நேற்றைய விசாரணையின் போது மன்றில் பொலிஸாரிடம் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டிருந்தது.


    ஸஹ்ரான் மற்றும் தப்பி சென்றதாக கூறப்புடும் புலஸ்தினி உறவு தொடர்பில் மறைத்தமை தொடர்பாக ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவானது சஹரானின் மனைவியிடம் 4 வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் இந்த நான்கு வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸஸார் மன்றில் கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


    இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.


    ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


    இதனிடையே, கடந்த கால வழக்கு தவணைகளின் போது குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கபப்டல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டப்படிருந்தது.


    அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad