மகனின் உழவு இயந்திரம் ஏறி தந்தை படுகாயம் - யாழ். சாவகச்சேரியில் சம்பவம்!
உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு இயந்திரத்தை இயக்கியபோது சக்கரம் தந்தையின் இடுப்பு பகுதியால் ஏறியுள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை