எட்டுக் கிலோ கேரளக் கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!
எட்டு கிலோ கஞ்சாவுடன் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் யாழ். நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்,
நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலை யடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான போலீஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை