முட்டைகளை குளிரூட்டியில் வைப்பவர்களா நீங்கள்? - இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா?
முட்டை புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாவதால் தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இதன் காரணமாக பெரும்பாலானோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகின்றனர்.
இதற்காக கிட்டத்தட்ட அனைத்து குளிர்சாதன பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்காக ஒரு தனி தட்டை வழங்குகின்றனர். ஆனால் ஆய்வின்படி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.
குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பின்பு இது முட்டை கருவிலும் பரவக்கூடும் என்பதால் நுகர்வுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
முட்டைகளை குளிரூட்டுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதால், முட்டைகள் கெட்டுப் போகாமல் இருப்பதோடு, சால்மோனெல்லா எனப்படும் தூண்டப்பட்ட உணவு விஷத்தைப் பெறுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது என்று நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த புதிய ஆய்வு முற்றிலும் நேர்மறையாக ஒரு தகவலை தெரிவித்துள்ளது. அதிலும், அறை வெப்பநிலையில் முட்டைகள் சிறந்த முறையில் சேமிக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
முட்டைகளை மிகவும் குளிரான வெப்பநிலையில் சேமிப்பது, அதாவது குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றை சாப்பிட முடியாததாக மாற்றும் என தெரிவித்துள்ளனர்.
கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது தான்.
மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் சாதாரண அரை வெப்பத்தில் இந்த பாக்டீரியாவால் இனப்பெருக்கம் செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.
எனவே, பல ஆய்வுகளின்படி சிறந்த உட்கொள்ளலுக்கு அறை வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் குளிரூட்டப்பட்டதை விட வேகமாக அழுகாது.
சிறந்த சுவையைத் தரும். இருப்பினும் முட்டைகளை அதிக காலத்திற்கு அரை வெப்பநிலையிலோ அல்லது குளிர் சாதன பெட்டியிலோ வைத்திருக்கக்கூடாது.
அதோடு வாங்கிய அனைத்தையும் ஓரிரு நாட்களிலேயே சமைத்துவிட முயற்சிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை