உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய கைதிகள் சித்தி!
உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட கைதி உட்பட இரண்டு சிறை கைதிகள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் நிர்வாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் சிறைக்கு வரும் கைதிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி சிறந்த பிரஜைகளாக மாற்றி சமூகமயப்படுத்தும் பிரதான நோக்கத்துடன் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முழுமையான தலையீட்டின் கீழ் கைதிகள் பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்பட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சியை சேர்ந்த 38 வயதான கைதி உயர் தரப்பரீட்சையில் பூகோளவியல், இந்து நாகரீகம் ஆகிய பாடங்களில் C சித்திகளை பெற்றுள்ளதுடன் தமிழ் மொழியில் S சித்தியை பெற்று பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையில் பரீட்சைக்கு தோற்றிய கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கைதி அரசியல் விஞ்ஞானம், பௌத்த நாகரீகம் மற்றும் சிங்கள மொழி ஆகிய பாடங்களில் S பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார் எனவும் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை