தொடர்ச்சியாக பெய்யும் மழை - விடுக்கப்பட்டது மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு ஏற்படக் கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்த அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இதேவேளை, இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தின் கீழ் வளிமண்டலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை