யாழ். காரைநகரில் சட்டவிரோதமாக சிகரெட் வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் - காரைநகரில் சட்டவிரோதமாக சிகரெட் விற்றவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டினை திருட்டுத்தனமாக விற்பனை செய்த காரைநகரை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1200 சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை