• Breaking News

    இரண்டு சிறுவர்களை விட்டுவிட்டு தாய் செய்த செயல் - பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை!

     


    மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மீட்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 9 வயது எனவும் இன்னொருவருக்கு 5 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த சிறுமிகளின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் கணவனையும் குழந்தைகளையும் கைவிட்டுச் சென்றுள்ளார். அன்று முதல் இந்த சிறுமிகள் தந்தையின் பொறுப்பில் வளர்ந்து வருகின்றனர்.

    உடல்நிலை சரியில்லாத பாட்டியும் இந்த வீட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பாட்டியை பராமரிக்கும் செயற்பாடுகளை குறித்த சிறுமிகளே மேற்கொண்டு வந்துள்ளனர்.

    சிறுமிகள் தங்கியிருந்த வீடு மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், சிறுமிகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கிராம மக்கள் குழந்தைகள் நல ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.


    இந்த நிலையில் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது சிறுமிகள் பாதுகாப்பின்றி அந்த இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது.

    உணவின்றி இருந்த சிறுமிகளுக்கும் உணவு வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்ததுடன், உடைகள், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை வழங்க பொலிஸ் அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad