முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு தேதி குறித்த இன்னாள் ஜனாதிபதி ரணில்!
இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவார் என பல தடவைகள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அவர் நாட்டை வந்தடையவில்லை.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாடு திரும்புவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரால் முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அவரைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை