• Breaking News

    சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு வலி. மேற்கு பிரதேச சபையினால் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு!

     


    எதிர்வரும் 02.09.2022 சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையில், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

    இதன்போது 100 பயனாளிகளுக்கு 200 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தியவசிய வளமான தென்னை வளம் அழிவடையக்கூடாது என்னும் நோக்கில் இந்த தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    "கனடா ஓராயிரம்" அமைப்பின் நிதி அனுசரணையுடன் இந்த தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது தென்னைகளை எவ்வாறு நாட்டவேண்டும் என்ற பயிற்சிநெறி வழங்கப்பட்டது. அத்துடன் தென்னைகளை எவ்வாறு நாட்ட வேண்டும், எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கங்கள் உள்ளடங்கிய கையேடுகள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வானது இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்கவும் முடியாது. முதன்முதலாக எமது பிரதேச சபையிலேயே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபையின் செயலாளர், சங்கானை பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள்,  சபையின் உத்தியோகத்தர்கள், தென்னை வள அபிவிருத்தி உத்தியோகத்தர், கனடா ஓராயிரம் அமைப்பின் இணைப்பாளர் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad