தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட தமிழ் திரைப்பட நடிகை!!!
தமிழ் பட நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பத்தாயிரம் கோடி’ படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கனிஷ்கா சோனி.
‘யுவராஜ்யம்’ என்ற தமிழ் படத்திலும் கனிஷ்கா நடித்துள்ளார்.
நிறைய ஹிந்தி டிவி தொடர்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரபலமான கனிஷ்கா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், ”நான் நேசிக்கும் ஒரு நபர் நான் மட்டுமே. எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கிட்டாருடன் நேரத்தை செலவிடுகிறேன்.
சிவா சக்தி என அனைத்தும் என்னுள்ளே இருக்கின்றன. நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது நெற்றியில் திருமணம் முடிந்ததற்கான அடையாளமாக குங்குமம் வைத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்து கனிஷ்கா வெளியிட்டுள்ள விடியோவில், கல்யாணம் என்பது உடலுறவு பற்றியதில்லை. அன்பும் நேர்மையும் பற்றியது.
நான் இவற்றை எதிர்பார்த்து என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அதனால் நான் தனியாக வாழ்வது என முடிவெடுத்துவிட்டேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை