மண்ணெண்ணெய் விநியோகம்
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மண்ணெண்ணெய் விலையை திருத்துவது குறித்தும் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இம்மாதம் 13 ஆம் திகதியும் இரண்டாவது கப்பல் 29 ஆம் திகதியும் வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், எதிர்வரும் 15 ஆம் தேதி முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்க உள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை