வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்றாகும்.
இந்த தினத்தினை முன்னிட்டு யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பதாகை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை