வருங்கால மனைவி பரீட்சையில் தோல்வி அடைவார் என்பதற்காக பாடசாலை கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த இளைஞன்...!
எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் பொலிசார் கைது செய்தனர்.
பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த பின்னர், அந்த இளைஞன் தனது சொந்த கிராமத்தில் ஒழிந்து கொள்வதற்காக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் அந்த நபர் பற்றிய அடையாளங்களை பொலிசுக்கு தெரியப்படுத்தினர்.
இப்போது அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இறுதியாண்டு வகுப்பில் பயின்று வரும் ஒரு மாணவி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது வருங்கால மனைவி இந்த ஆண்டு பரீட்சையில் தோல்வியடைவார் என்பதை அறிந்த அந்த நபர், பள்ளியின் கட்டுப்பாட்டு அறையை எரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரது வருங்கால மனைவி பள்ளியில் மீண்டும் படிப்பை தொடர வேண்டியிருக்கும் என்பதால், அவரது திருமணம் ஒத்திவைக்கப்படும் என்று அவர் அஞ்சினார்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தீயை தீயணைப்பு வீரர்கள் விரைவாக கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும், பள்ளி முதல்வரின் அலுவலகம் மற்றும் பிரதான நிர்வாக பிரிவு கட்டிடம்க குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன.
மேலும் அங்கிருந்த சில மாணவர்களின் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் தீக்கிரையாகியதாக தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை