மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியர் பொலிஸாரால் அதிரடியாக கைது!
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சங்கீத பாட ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட திக்வெல்ல பொலிஸார் சந்தேகநபரான ஆசிரியரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை முத்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை