வாடிக்கு வைத்த தீயில் மூன்று கோடி ரூபா பெறுமதியான வலைகள் எரிந்து நாசம்! (படங்கள் இணைப்பு)
விசமிகள் வைத்த தீயில் வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டு பகுதியில் உள்ள மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மூன்று வாடிகளிலும் இருந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான வலைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்பகை காரணமாக இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை