யாழ். சுழிபுரத்தில் அரச அலுவலர்களின் வீட்டில் நகை திருட்டு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 7 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வீட்டின் உரிமையாளர் சங்கானை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமை புரிகின்றார், அவரது மனைவி யாழ். மாவட்ட செயலகத்தில் கடமை புரிகின்றார். இந்நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற வேளை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டினை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை