• Breaking News

    வடக்கில் – QR பாரிய வெற்றி

     


    QR குறியீட்டு முறையில் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. வடக்கு மாகாணத்துக்கு அதிலும் யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வாரம் அதிகளவான எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

    அரச பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மாத்திரம் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகிக்க திட்டமிடப்பட்டபோதும் , வெகுவிரைவாகவே அவர்களுக்கான எரிபொருள் வழங்கும் பணி முடிவடைந்ததால், மதியத்தின் பின்னர் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

    கடந்த வெள்ளிக்கிழமையின் பின்னர் வடக்கின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் குறைந்து காணப்படுகின்றது.

    QR குறியீட்டு அட்டை முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலேயே, இவ்வாறு எரிபொருள் நெருக்கடி குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad