மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல் யாழ். வட்டுக்கோட்டையில் அனுஷ்டிப்பு!
மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வட்டுக்கோட்டை குக் வீதியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு முன்னால் நடைபெற்றது.
கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பாரதியாரின் சிறப்பு பற்றிய சொற்பொழிவு கலாநிதி சிதம்பரமோகன் அவர்களால் ஆற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், சிவலோகநாத குருக்கள், ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹா சந்துர ஸ்ரீ விமல தேரர், சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை