கழிவுநீர் வாய்க்காலில் சிக்கிய 14 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!
கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில், கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கால்வாயில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைககளில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு சிகிக்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை