• Breaking News

    இலங்கையில் காதலியை சந்திக்க பேருந்தினை கடத்திச் சென்று ன 15 வயதுக் காதலன் ; இது இரண்டாம் முறை!

     


    பிலியந்தலை பேருந்து நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்று (11) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பேருந்துகளின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

    சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​ பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

    பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்த போதும், பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இதனையடுத்து . பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டன .

    நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்திள்ளனர்.

    அப்போதுதான் அது ​​கடத்தப்பட்ட பேருந்துதான் என்பதை பொலிஸார் உறுதி செய்த நிலையில், தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர்.

    பேருந்தை எடுத்துச்சென்று தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோதே பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.

    மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது பேருந்துகள் இல்லாததால் செய்வதறியாது தான் தவித்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

    அதேவேளை கைதான சிறுவன் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad