20 குழந்தைகளை பெறுவதே எமது நோக்கம் - 16 குழந்தைகள் பெற்ற பெண் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
பெண் ஒருவர் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், அந்த பெண் பற்றி சுவாரசிய தகவல்கள் வைரலாகி வருகிறது.
North Carolina பகுதியைச் சேர்ந்தவர் Carlos. இவரின் மனைவி பெயர் Patty Hernandez(40). இந்த தம்பதியர் இதுவரை மொத்தம் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி இந்த 16 குழந்தைகளின் பெயர்களிலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது, அவர்களின் தந்தையான Carlos பெயரில் வரும் முதல் எழுத்தான ‘C’ வைத்து தான் அனைத்து குழந்தைகள் பெயரும் ஆரம்பமாகிறது.
உதாரணமாக, Carlos Jr, Christopher, Carla, Caitlyn, Cristian என ஒவ்வொரு பிள்ளைகளின் பெயர்கள் ‘C’ வைத்து தான் வைத்துள்ளனர். பிறந்த 16 குழந்தைகளில், 6 ஆண் குழந்தைகளும், 10 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதில், 3 இரட்டை குழந்தைகளும் அடங்கும். அதேபோல், தனது திருமண வாழ்வில் மொத்தம் 14 ஆண்டுகள் முழுவதும் Patty கர்ப்பமாக தான் இருந்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில், இதுகுறித்து அவர் பேசுகையில், “13 வாரங்கள் ஆகி உள்ள நிலையில், மீண்டும் நான் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இதனால் நான் 14 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ளேன். தற்போது, எங்களின் 17 ஆவது குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்பு கிடைத்ததால், நான் மிகவும் உற்சாகத்துடனும் உள்ளேன். நாங்கள் அனைத்தையும் கடவுளிடமே விட்டு விட்டோம்.
அவர் மீண்டும் நான் கர்ப்பம் அடைய வேண்டும் என நினைத்தால், அது நடக்கட்டும்” என தெரிவித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு, வீட்டில் மொத்தம் 5 படுக்கை அறைகள் உள்ளது.
அதில் பல அடுக்கு படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான தொட்டில்களும் உள்ளன. இதுமட்டுமின்றி, ஒரு வாரத்திற்கு தங்களின் குழந்தைகளை பராமரித்து கொள்ள இந்திய மதிப்பில் சுமார் 72,000 ரூபாய் வரை அவர்கள் செலவழித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முக்கியமாக 20 குழந்தைகள் கிடைப்பது வரை குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தும் முடிவு இருவரும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை