• Breaking News

    28 வருடங்களின் பின் சிறப்பாக நடைபெற்ற வயாவிளான் ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

     


    யாழ்ப்பாணம் வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

    இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 28 வருட காலமாக இருந்த கோயிலை விடுக்குமாறு பல தரப்பினரிடமும் ஆலய பக்தர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆலய பகுதியினை இராணுவத்தினர் விடுவித்து தமது உயர்பாதுகாப்பு வலய வேலியினை பின் நகர்த்தினார்.

    அதனை அடுத்து முற்றாக சேதமடைந்த ஆலயத்தினை மீள் நிர்மாணம் செய்வதற்குள் ஆலய பரிபாலன முயற்சிகளை முன்னெடுத்து , உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தோர்களின் நிதி பங்களிப்பு , ஆதரவுடன் ஆலயத்தினை இராஜ கோபுரத்துடன் புனர்நிர்மாணம் செய்தனர்.

    இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7.09 மணி முதல் 09.04 மணி வரையிலான கன்னி லக்கின சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தின் போது கடும் மழை பொழிந்த போதிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு வைரவ பெருமானை வணங்கி அருளாசியினை பெற்றுக்கொண்டனர். 







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad