Thursday, January 9.
  • Breaking News

    300 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம்!

    20220906_184053

    புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின்பு அதிசயம் ஒன்று இந்த ஆண்டு அரங்கேறியுள்ளது.

    300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த முத்தாலம்மன் கோவிலில், வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்கள், திருமண தடை நீங்க இங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் சிலை மீது சூரிய ஒளிபட்டுள்ளது.

    இந்நிலையில் 3-வது முறையாக இன்று காலை 6.22 மணியளவில் மூலவரான முத்தாலம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்ந்தது.

    இதைப்பார்த்து கோவில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரே ஆண்டில் 3 முறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிசயித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad