500 ரூபாவை எட்டவுள்ள பாணின் விலை - அதிர்ச்சியில் மக்கள்!
நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை நிறுத்தியுள்ளனர்.
பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளன. பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், பாண் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை.
தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும். ஏழைகளின் உணவாக இருந்த பாண் தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது.
பல ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறேன். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளேன்.
என் பேக்கரியில் வேலை செய்தவர்களுக்கு என்ன நடக்கும் என தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை