• Breaking News

    யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!

     


    யாழ்ப்பாணத்தில் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad