காட்டில் புதைக்கப்பட்ட 7 வயதுச் சிறுமி தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பம்!
இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமைக்காக கறுவாத் தடியால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் தாயாருடன் வசிக்கும் நபரை மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்ய பொலிஸார் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த அனைவருடனும் குறித்த நபர் காட்டிற்குள் சென்று தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 7 வயது சிறுமி, இதன்போது உயிரிழந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை