• Breaking News

    ஜனநாயகத்தின் கொள்கை இல்லாததில் 90 சதவீதம் வரிச்சுமை மக்கள் மீது – ஜே.வி.பி குற்றச்சாட்டு!


     ஜனநாயகத்தின் கொள்கையில்லாததில் நாட்டில் வரிச்சுமை என்பது நூற்றுக்கு 90 வீதம் மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. என மக்கள்விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

    நாட்டின்தேசிய கொள்கைத்திட்ட அடக்குமுறைக்கு எதிராக தமிழ், சிங்கள, முஸ்லிம் என பேத இல்லாது ஒன்றினைய வேண்டிய காலம் உருவாகிவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவரும் ஆகிய தோழர் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

    யாழ். மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியாளர் சந்திப்பிலே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவரும் ஆகிய தோழர் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

    குறிப்பாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை என்பது இஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் காணப்படுகின்றது. அதற்கான வலுவான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. காரணம் கேட்டால் அதற்கான டொலர் இல்லை என்கின்றனர். இவ்வாறான நிலை தொடருமானல் இன்னும் பல கஷ்டங்களுக்குள் முகம்கொடுக்க நேரிடும்.

    வடமாகாணத்தில் பல்வேறு விதமான மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர. இவற்றில் காணமால் போனவர்களின் உறவுகளுக்கான நீயதி, தொழில் துறை அற்றவர்கள், விதவைகள், சிறுவர்களுக்கான போசாக்கு இன்மை, கொரோனா தொற்று நிலையிலும் கூட மாணவர்களின் கற்றல் நிலைமைகளில் வினைத்திறன் அற்ற நிலைமைகள், விவசாயிகளுக்கான உரமானிய இல்லாது உள்ளது. ஆனாலும் இதற்கான திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

    இதனை விட அன்றைய கால ஜனாதிபதியும், இன்னாள் ஜனாதிபதியும் கூட மிக பாரதூரமாக பொருளாதார ரீதியாக நலிவடைக்கு எந்ததொரு களங்களும் உருவாக்கப்பட இல்லை. அது வடமாகாண மக்களுக்கு பின்தாங்கலாக காணப்படுகின்றது.

    மக்கள் விடுதலை முன்னணியின் என்பது அனைத்து மக்களுக்கான கொள்கையினை வலியுறுத்துகின்ற கட்சியாக காணப்படுகின்றது. கட்சியின் ஊடாக ஒரு புதிதொரு ஜனநாயகத்தினை உருவாக்கமுடியும். அது தொடர்பாக மக்கள் சந்திப்பு இன்று பல்வேறு இடங்களில் நடாத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஊடக சந்திப்பே இதுவாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

    இவ் ஊடக சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம், பிரதேச அமைப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad