• Breaking News

    யாழ். நீதிமன்றிலிருந்து தப்பியோடிய குற்றவாளிகள் - பின்னர் நடந்த சம்பவம்!


     சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேகநபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.

    போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் புதன்கிழமை (08) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

    இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.

    தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    தப்பி சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad