யாழில் சாராயம் விற்பனை செய்த மூதாட்டி அதிரடியாக கைது!
யாழ்ப்பாணம் வேலணை 6ம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 750 மில்லி மீட்டர் 4 போத்தல்கள், 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 போத்தல்கள் கைபெற்றப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை