"காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை" கையெழுத்து போராட்டம் யாழில் ஆரம்பம்!
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் "காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை" என்ற தொனிப்பொருளில் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திலிருந்து கையெழுத்து போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி யாழிலிருந்து ஊர்தி மூலம் முன்னெடுக்கப்படும் இக் கையெழுத்து போராட்டம் அம்பாந்தோட்டையை சென்றடைய உள்ளது.
இந்தப் போராட்டமானது, அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக கூறிய கூற்றினை நடைமுறைப்படுத்துமாறும் கோரி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை