ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு - பல கோணங்களில் விசாரணை ஆரம்பம்!
கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தினுள் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டது.
உயிரிழந்த பெண் சகுந்தலா வீரசிங்க என்ற 38 வயதுடையவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை