• Breaking News

    சாவகச்சேரி தாதிய பரிபாலகரின் விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பி வைப்பு!

     


    யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் மோசடியான விதத்தில் தனது அரச சம்பளத்தை பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கணக்காய்வு விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.

    குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகர் ஒருவர் கடமைக்கு சமூகமளிக்காத நாட்களுக்கு அரச சம்பளத்தை பெற்றமை மற்றும்  முறைகேடான விதத்தில், தனது சமூகமாளிக்காத நாட்களுக்கு கையெழுத்தை வைத்தமை தொடர்பான விசாரணை மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

    இதன் அடிப்படையில் குறித்த விசாரணை அறிக்கை மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad