• Breaking News

    காயங்களுடன் வீதியோரத்தில் ஹட்டனில் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

     


    ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தி வீதியோரத்திலிருந்து காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு தடயவியல் பிரிவு பொலிஸாரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது.

    காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad