• Breaking News

    இலங்கையில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்படவுள்ள காற்பந்தாட்ட மைதானம்!


     இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானம் ஒன்று நிறுவப்படவுள்ளது.

    மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் Sheik Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani உடன் கலந்துரையாடியுள்ளார்.

    இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக அமைச்சர் ஹரின் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார்.

    அத்துடன் இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad