• Breaking News

    தவறான முடிவெடுத்து இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - யாழில் சம்பவம்

     


    யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது- 24) என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

    சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad