கோபத்தில் இருந்த ஆசிரியரை முத்தமிட்டு கூல் ஆக்கிய மாணவன்! (படங்கள் இணைப்பு)
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் கோபத்தில் இருக்கும் தருணத்தில் மாணவர் ஒருவர் முத்தமிட்டு ஆசிரியையை சமாதானப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் சேட்டை என்பது அதிகமாகவே இருக்கும். வீடுகளில் 2 குழந்தைகள் இருக்கும்போதே அவர்கள் சேட்டையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் தவிக்கும் நிலையில், பள்ளியில் ஆசிரியைகைள் 30 குழந்தைகளுக்கு மேல் சமாளிப்பது என்பது கடினமே.
இங்கு ஒரு குழந்தை வகுப்பில் குறும்புத்தனம் செய்யத் தொடங்குகிறது, அவரைப் பார்த்து ஆசிரியர் கோபமடைந்து தனது இருக்கையில் சென்று அமர்ந்தவரை முத்தம் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றது.
ஆசிரியரை சமாதானம் படுத்தும் போது, குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார், ஆனால் ஆசிரியர் அவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை.
இதற்கிடையில் அந்த மாணவன் ஆசிரியரை மீண்டும் மீண்டும் அணைத்துக் கொள்கிறார். அத்துடன் அவரது ஆசிரியருக்கு முத்தமிட்டு சமாதானம் படுத்த முயற்சிக்கிறான்.
இறுதியில் அந்த ஆசிரியரும் குழந்தைக்கு முத்தமிட்டு இனி இப்படி குறும்புத்தனம் செய்ய கூடாது என்று கூறி கட்டி அணைத்துக்கொள்கிறார்.
ஆசிரியரை முத்தமிட்ட மாணவன்! - வீடியோவை பார்ப்பதற்கு இந்த இணைப்பினை அழுத்துங்கள்
கருத்துகள் இல்லை