• Breaking News

    கணவர் இறந்த மறு கணமே உயிரிழந்த மனைவி! - ஊரே சோகத்தில்...!

     


    கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலி வேலை செய்து வரும் அவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    குறிப்பாக அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார். இதனிடையே நேற்று காலை சேகரின் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணவர் சேகரின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார்.

    உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுளளனர்.

    இதனையடுத்து அஞ்சலியின் உடலும் அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது. கணவன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்வையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad