• Breaking News

    பேராதனை பல்கலையின் மாணவன் உயிரிழப்பு - சோகத்தில் குடும்பம்

     


    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    பேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனின் சடலம் 5 நாட்களின் பின்னர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குறித்த மாணவர் கடந்த 26ஆம் திகதி மாலை 3 மணியளவில் பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

    சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டமையால் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    பாலத்திற்கு அருகில் பையை வைத்துவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவனைப் பார்த்த நபர் ஒருவர்5 வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், கடற்படையினரும் ஐந்து நாட்களாக ஈடுபட்டனர். நுவன் லக்ஷித தேவசுரேந்திர என்ற 24 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad