அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று மகசின் சிறைச்சாலையை சென்றடைவு!
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களுடைய உறவினர்கள் 40 பேர் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இன்று (11) வருகை தந்தனர்.
‘உறவுகளுக்கு கரம் கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் கடந்த 13 முதல் 27 ஆண்டுக்களாக சிறைகளில் வாடும் உறவுகளை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் இவர்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை கொழும்பை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின உறவினர்கள் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் மற்றும் தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமது உறவினர்களை பார்வையிட்டனர்.
கருத்துகள் இல்லை