முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 37வது ஆண்டு சிராத்ததின நினைவேந்தல் இன்று தாவடி சந்திக்கு அருகாமையில் உள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி தூவி அனுஷ்டிக்கப்பட்டது.
இத் தூபிக்கான முதல் மலர்மாலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தர்மலிங்கத்தின் மகனும் ஆகிய த.சித்தார்த்தன் அணிவித்தார். இதனை தொடர்ந்து எனைய சிறப்பு விருந்தினர்கள், மற்றும் நலன்விரும்பிகள், சமூக ஆய்வாளர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தர்மலிங்கத்தின் விடை காணாத அரசியல் வழிவியல் உரிமைகளும் என்னும் சிறப்புரையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோ.மாவைசேனாதிராஜா நிகழ்த்தினர்.
இதில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.சிவஞானம், மற்றும் வலி. தென் மேற்கு பிரதேசபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், சமூக ஆய்வாளர்களும் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை