• Breaking News

    கஞ்சா கடத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இரு சகோதரர்கள் மற்றும் மைத்துனர் கைது!

     

    எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பாரியளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது மைத்துனர் ஆகியோர் சுமார் 5 கோடி பெறுமதியான மூன்று வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    அவர்கள் பயன்படுத்திய சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொகுசு ஜீப்புகளும், ஒரு கால் டாக்சியும் அந்த வியாபாரத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டது.

    எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு எழுத்துமூலம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    எம்பிலிபிட்டிய, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்து, இந்த கடத்தல் சில காலமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    மேற்படி கடத்தல்காரர்கள், அடிவருடிகளைப் பயன்படுத்தி, தினமும் இடங்களையும் நேரத்தையும் மாற்றி, கஞ்சா கடத்தலை நீண்டகாலமாக பாரியளவில் மேற்கொண்டு வருவதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

    பணமோசடி சட்டத்தின் கீழ் காவல்துறையினரின் காவலில் எடுத்து தடை செய்யப்பட்ட 5 கோடி வாகனங்கள் தொடர்பான உண்மைகளை எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad