யாழில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பாடசாலைக்கு செல்வதனை நிறுத்தியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்தார்.
மாதவிடாய் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாணவிகள் இவ்வாறு பாடசாலை செல்வதற்கு தயக்கம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பாடசாலைகளில் காலை கூட்டங்களின் போது மாணவர்கள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை