ஜனாதிபதியின் இல்லத்தில் திருட்டு - சந்தேகநபர் கைது!
போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை களவாடியதாக கூறப்படும் நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இல்லத்திற்குள் புகுந்து திருடப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தலுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை