யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருடன் திலிப் லியனகே விசேட சந்திப்பு!
வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற வைத்தியர் திலிப் லியனகே, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியினை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று(8) யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர தேவைக்கான மருத்துவ உதவிகள், இடர் காலத்திற்கான ஒதுக்கீடுகள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை