• Breaking News

    கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் சங்கானை வைத்தியசாலையில் திறப்பு!

     


    சங்கானை பிரதேச வைத்தியசாலையில் கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

    குறித்த சிகிச்சை நிலையத்தின் தேவையறிந்து வேல்ட் விஷன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட தமிழ் மாணவர்கள், அமரர் அப்புத்துரை  இராசகுமார் அவர்களது நினைவாக கனடா வாழ் அன்பர் ஆகியோர் நிதி பங்களிப்பு வழங்கினர்.

    இந் நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியசாலை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad