சிறப்பாக நடைபெற்ற சந்நிதியானின் பூங்காவன உற்சவம்!
அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தானத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 10வது திருவிழாவான பூங்காவனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
கருவரையில் வீற்றிருக்கும் செல்வச்சந்நிதியான் வேல் பெருமானுக்கு
விஷேட அபிஷேசங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று, பின் அலங்கரிக்கப்பட்ட தாவரசெடிகளை பயன்படுத்திய தாமரை பீடத்தில் வீற்று பக்தர்களுக்கு வெளிவீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்வாலயத்தில் கடந்த 27.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த திருவிழாவில் 05.09 அன்று பூங்காவனத்திருவிழாவும், 09.09 இரதோற்சவமும்,10.09 அன்று தீர்த்தவோற்சவத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.
இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
கருத்துகள் இல்லை