காரில் பயணம் செய்தவர் மீது துப்பாக்கிச் சூடு - நீர்கொழும்பில் சம்பவம்!
கம்பஹா, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோட்டுவ விளையாட்டு அரங்குக்கு அருகில் காரில் பயணித்துக்கொண்டு இருந்த நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டுவெல்கம பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரும் காயமடைந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிஸ்தோல் ரக துப்பாக்கியே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கம் பிஐஈ 2297 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை